மனைவிக்கு தெரியாமல் வெளிநாடு சென்ற கணவன் மீது வழக்கு
மனைவிக்கு தெரியாமல் வெளிநாடு சென்ற கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாசலை சேர்ந்தவர் நவீன்நிஷா 27). இவருக்கும், சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த மகேஷ்வரனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நவீன்நிஷா குடும்பத்தினர் 18 புவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை வரதட்சணையாக வழங்கினர். திருமணம் நடந்த 10 நாட்களில் மனைவியிடம் சொல்லாமல் மகேஷ்வரன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இது குறித்து அவரது பெற்றோரிடம் நவீன்நிஷா கேட்ட போது, சில நாட்களில் வந்து விடுவார் என்று கூறி சமாளித்துள்ளனர். ஆனால் 6 ஆண்டுகள் ஆகியும், மகேஷ்வரன் நாடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து நவீன்நிஷா அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார், மகேஷ்வரன், அவரது தந்தை ராமராஜ், தாய் ருக்மணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story