வெவ்வேறு விபத்துகளில் பெயிண்டர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் பெயிண்டர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 24 April 2022 1:00 AM IST (Updated: 24 April 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் பெயிண்டர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கொள்ளிடம் டோல்கேட், ஏப்.24-
வெவ்வேறு விபத்துகளில் பெயிண்டர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
பெயிண்டர்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகா, திருநறையூர் பகுதியை சேர்ந்த அறிவுமணி மகன் தீனதயாளன் (வயது 26). இவர் கோவையில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு பெற்றோரை பார்க்க வந்த தீனதயாளன் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில்கோவைக்குதிரும்பிசென்றார்.நேற்றுஅதிகாலைதிருச்சிநெ.1டோல்கேட்டை அடுத்த பனமங்கலம் அருகேபுதிதாக அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம்-திருச்சிதேசியநெடுஞ்சாலையில்வந்தபோது,திடீரென்றுகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் பக்கவாட்டு தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த தீனதயாளன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு விபத்து
திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் மேல தெருவை சேர்ந்தவர் தில்லை நடராஜன். இவருடைய மகன் பூபதி (25). கொத்தனாரான இவர் நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திண்டுக்கரை திருப்பத்தில் சென்றபோது, திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பூபதி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி  அவர் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் கண்ணாடியை அப்பகுதி மக்கள் உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story