இடைகாட்டூரில் திருஇருதய ஆலயத்தில் பாஸ்கு விழா


இடைகாட்டூரில் திருஇருதய ஆலயத்தில் பாஸ்கு விழா
x
தினத்தந்தி 24 April 2022 1:14 AM IST (Updated: 24 April 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

இடைகாட்டூரில் திருஇருதய ஆலயத்தில் பாஸ்கு விழா நடைபெற்றது.

மானாமதுரை, 
மானாமதுரை அருகே இடைகாட்டூரில் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 2ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு பாஸ்கு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருச்சி கிழக்கு மாவட்ட எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார். விழாவில் தேவாலயத்தின் முன்பு அலங்கரிக்கப்பட்ட அரங்கில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நாடக கலைஞர்கள் நாடகமாக நடித்து காண்பித்தனர்.. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முக நாதன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சசிகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் மதுரை, மானாமதுரை, சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை இமானுவேல் தாஸன் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story