புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி, ஏப்.24-
ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரெயிலில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது யாரும் உரிமை கோரப்படாத பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது. அதை சோதனை செய்தபோது, அதில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய போலீசார், ரெயிலில் அதனை விட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல கும்பகோணத்தில் இருந்து திருச்சி ஜங்ஷனுக்கு நேற்று மாலை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலின் எஸ்-6 பெட்டியில் கேட்பாரற்று பிளாஸ்டிக் பை ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், அந்த பையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். புகையிலை பொருட்களை ரெயிலில் கடத்தி வந்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story