வாய்க்காலை தூர்வாரும் பணி தொடக்கம்
வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நமங்குணம் கிராமத்தில் காடூர் அணைக்கட்டு வழங்கு வாய்க்கால் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். இப்பணியில் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் 4,300 மீட்டர் நீளம் வரை தூர்வாரப்படவுள்ளது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிப்பதுடன், கரைகளின் மேல் போடப்படும் மண் மீண்டும் கீழே விழாதவண்ணம் கரைகளை பலப்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மருதையாறு வடிநிலக்கோட்டத்தின் சார்பில் அரியலூர் வட்டத்தில் கடுகூர் பெரிய ஏரி வரத்து வாய்க்கால், கல்லங்குறிச்சி பெரிய ஏரி வரத்து வாய்க்கால், மல்லூர் நைனேரியின் உபரிநீர் வெளியேறும் வாய்க்கால், கீழவண்ணம் மதகு ஏரியின் வரத்து வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணிகளும், செந்துறை வட்டத்தில் காடூர் அணைக்கட்டு வழங்கு வாய்க்கால், ஆண்டிமடம் வட்டத்தில் செங்கால் ஓடை அணைக்கட்டு உபவரத்து வாரி மற்றும் பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றை தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் வருகிற ஜூன் 12-ந் தேதிக்குள் முடிக்க முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (நீ.வ.து) கீதா, உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story