விழிப்புணர்வு கூட்டம்


விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 1:33 AM IST (Updated: 24 April 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டையில் பட்டாசு உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தாயில்பட்டி, 
விபத்தில்லா பட்டாசு உற்பத்தி மற்றும் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க கூடாது என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில் வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் குருசாமி, சட்ட ஆலோசகர் ஜெயபிரகாஷ், துணை செயலாளர் முனீஸ்வரன் உள்பட பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனுமதி பெற்ற பட்டாசுகளை மட்டும் தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

Next Story