முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்


முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 1:35 AM IST (Updated: 24 April 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

அரியலூர்:
அரியலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு என சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்களை சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இருபிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story