ெரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை


ெரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 24 April 2022 1:35 AM IST (Updated: 24 April 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு ெரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு ெரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
திட்ட பணிகள் 
 விருதுநகர் அருகே சத்திர ரெட்டியபட்டி கிராமத்தில் நடந்து வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- 
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்துக்கேற்ப பேசி வருகிறார். 
போலீஸ் துறையில் ஆங்காங்கே ஒரு சில நேரங்களில் சில சம்பவங்கள் நடப்பது இயல்பு தான். எனினும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தமிழக போலீசார் முறையாக செயல்பட்டு வருகிறார்கள். சட்டசபையில் இயற்றிய மசோதாக்களை கவர்னர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் அவரது கடமை. ஆனால் பா.ஜ.க.வின் அழுத்தத்தின் காரணமாக அவர் தயக்கம் காட்டுகிறார் என எண்ண வேண்டியுள்ளது. 
தமிழகத்திற்கு துரோகம் 
பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலையை பொறுத்தமட்டில் அவர் கூறும் கருத்துக்கள் முழுமையாக நியாயமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மக்கள் பிரச்சினையை அவர் டெல்லி செல்லும் பொழுது தமிழக மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை மத்திய மந்திரிகளிடமும், பா.ஜ.க. தலைவர்களிடமும் தெரிவிக்க வேண்டியது அவரது கடமை.  மத்திய அரசு ெரயில் போக்குவரத்து வசதியை பொருத்தமட்டில் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது. விருதுநகர், சிவகாசி,  அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் ெரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத்தவறி விட்டது. 
எனினும் தொடர்ந்து இதுகுறித்து மத்திய ெரயில்வே அமைச்சரிடமும், ெரயில்வே அதிகாரிகளிடமும், பாராளுமன்றத்திலும் குரல் கொடுப்பேன். என் தொகுதி மக்கள் குறைகளை சுட்டிக்காட்டும் போது அதனை தீர்த்து வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 
100 நாள் வேலை திட்டம் 
பேட்டியின்போது சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சத்திரரெட்டிய பட்டி பஞ்சாயத்து தலைவர் மருதராஜ், முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், சிவகுருநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
முன்னதாக கே. உசிலம்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. குறைகளை கேட்டறிந்ததுடன் அவர் தத்தெடுத்து உள்ள சத்திரரெட்டியபட்டி கிராமத்திலும் திட்டப்பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார்.

Next Story