சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா பறிமுதல செய்யப்பட்டது.
சேலம், .
கஞ்சா கடத்தல்
ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரெயில்களில் சோதனை நடத்தி கஞ்சா கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரெயில்களில் கஞ்சா கடத்தியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 141 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில், சிலர் கூலி பணத்துக்காக வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து கூலி பணம் கொடுக்கும் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் ரெயில்வே போலீஸ் ஏட்டு ராமன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று அதிகாலை சேலம் வழியாக சென்ற தன்பாத்-ஆலப்புழா (வண்டி எண் 13351) எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர்.
பறிமுதல்
அப்போது எஸ்-6 மற்றும் எஸ்-7 ஆகிய ரெயில் பெட்டிகளை இணைக்கும் பகுதியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. இதையடுத்து அந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது தொடர்பாக அந்த பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story