மின்னல் தாக்கி கன்றுக்குட்டி பலி; 5 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது
டி.என்.பாளையம் அருகே மின்னல் தாக்கி கன்றுக்குட்டி பலியானது. 5 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியை ஒட்டிய வினோபாநகரை சேர்ந்தவர் ரத்னாள் (வயது 40). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 4 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வினோபா நகர் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் வளர்த்து வந்த கன்றுக்குட்டியை மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கன்றுக்குட்டி இறந்தது. மேலும் அவருடைய தோட்டத்தில் இருந்த 5 தென்னை மரங்களையும் மின்னல் தாக்கியது. இதில் அந்த தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது.
Related Tags :
Next Story