கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் மர்ம சாவு தந்தை போலீசில் புகார்


கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் மர்ம சாவு தந்தை போலீசில் புகார்
x
தினத்தந்தி 24 April 2022 3:31 AM IST (Updated: 24 April 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் மர்மமுறையில் இறந்தது தொடர்பாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

தாரமங்கலம், 
காடையாம்பட்டி அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்தவர் ரமணி. இவருடைய மகள் செல்வி. இவருக்கும், ஓமலூர் அருகே உள்ள கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த விஜயன் என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் செல்விக்கு தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஸ்ரீதர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் தாரமங்கலம் அருகே சேடப்பட்டியில் தனியாக வீடு எடுத்து கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் செல்வி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறிந்த செல்வியின் தந்தை ரமணி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Related Tags :
Next Story