மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 24 April 2022 1:08 PM IST (Updated: 24 April 2022 1:08 PM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, 

செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பகுதியில் வசித்து வந்தவர் அஜீத் துரை (வயது 23). இவர், நேற்று செங்குன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கவரைப்பேட்டை அடுத்த போரக்ஸ் அருகே வந்தபோது, அதே திசையில் வந்த டிப்பர் லாரி, இவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அஜீத் துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story