தொழிலாளிக்கு அடி-உதை; 4 பேர் மீது வழக்கு
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் தொழிலாளியை முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசி கையாலும் கட்டையாலும் தாக்கினார்கள்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மும்முடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). எம்பிராய்டரி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கர் வேலையின் காரணமாக வெளியே சென்றார். பின்னர் அவர் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த மணி மற்றும் அவரது மனைவி லட்சுமி, மகன் வினோத், மகள் தேவி ஆகியோர்் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசி கையாலும் கட்டையாலும் தாக்கினார்கள்.
இதில் பலத்த காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சங்கர் மப்பேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் மேற்கண்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story