அடுத்தடுத்த சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


அடுத்தடுத்த சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 24 April 2022 2:43 PM IST (Updated: 24 April 2022 2:43 PM IST)
t-max-icont-min-icon

அடுத்தடுத்த சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

காட்டுப்புத்தூரை அடுத்த எம்.களத்தூரை சேர்ந்தவர் வேம்படி (வயது 68). சர்க்கரை நோயால் அவதி அடைந்து வந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*துவாக்குடி அருகே உள்ள அண்ணா வளைவு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (42). குடிபோதைக்கு அடிமையாக இருந்த இவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கடன் பிரச்சினையில் சிக்கினார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story