பெண் தீக்குளித்து தற்கொலை


பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 24 April 2022 3:59 PM IST (Updated: 24 April 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அடுத்த பாலவாக்கம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலவாக்கம் காலனியை சேர்ந்தவர் ராஜா. கூலித்தெழிலாளி. இவரது மனைவி பிரபாவதி (வயது 38). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 20-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பிரபாவதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாவதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில், கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story