மீஞ்சூர் ஒன்றியத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்; வீடுகளில் சுகாதார பணியாளர்கள் சோதனை
மீஞ்சூர் ஒன்றியத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பற்றி தகவலறிந்த சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் 4 வயது குழந்தை, ஒரு முதியவர் என 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனைத்தொடர்ந்து தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரி தெருவில் 12 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டி, தேங்காய் ஓடுகள், டயர், காலி பாட்டில் உட்பட பல்வேறு பொருட்களை கண்டுபிடித்து பிளிச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடு, வீடாக காய்ச்சல் அறிகுறி ஏதாவது உள்ளதா என ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் கேட்டறிந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story