தூத்துக்குடி மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


தூத்துக்குடி மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள்,  இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 24 April 2022 8:14 PM IST (Updated: 24 April 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டுகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பி.கணேஷ், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், கிருஷ்ணகிரி மாவட்டம் குற்ற ஆவணங்கள் காப்பக பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், தூத்துக்குடி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, தஞ்சை மாவட்டம் பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபிநபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், தூத்துக்குடி முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், தூத்துக்குடி காத்திருப்போர் பட்டியலில் இருந்த கடலோர பாதுகாப்பு அமலாக்கபிரிவு இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மணிமாறன், தூத்துக்குடி தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டராகவும், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், குலசேகரபட்டனம் இன்ஸ்பெக்டராகவும், தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன், தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.


Next Story