அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி வெற்றி


அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக  அணி வெற்றி
x
தினத்தந்தி 24 April 2022 8:59 PM IST (Updated: 24 April 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் வ.உ.சி. துறைமுக அணி கோப்பையை வென்றது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடந்த அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் வ.உ.சி. துறைமுக அணி கோப்பையை வென்றது.
கூடைப்பந்து போட்டி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் பெருந்துறைமுக விளையாட்டு கழகம் ஆகியவை இணைந்து, அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டிகளில் தூத்துக்குடி, சென்னை, ஒடிசா, விசாகப்பட்டினம் ஆகிய 4 பெருந்துறைமுகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் லீக் முறையில் நடந்தன. இதனால் ஒவ்வொரு அணியும், மற்ற 3 அணிகளுடனும் தலா ஒரு முறை மோதின. இந்த போட்டிகள் நேற்று மாலை முடிவடைந்தது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற வ.உ.சி. துறைமுக அணி முதல் இடம் பிடித்து வெற்றிக் கோப்பையை பெற்றது. ஒடிசா பாரதீப் துறைமுக அணி 2-வது இடத்தையும், சென்னை துறைமுக அணி 3-வது இடத்தையும் பிடித்தது.
பரிசளிப்பு விழா
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. விழாவுக்கு வ.உ.சி. துறைமுக விளையாட்டு கழக செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா முன்னிலை வகித்தார். வ.உ.சி. துறைமுக விளையாட்டு கழக தலைவர் சுரேஷ்பாபு வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story