டிரைவரின் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகை திருட்டு


டிரைவரின் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 24 April 2022 9:04 PM IST (Updated: 24 April 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

வில்லுக்குறி அருகே நள்ளிரவில் டெம்போ டிரைவரின் வீட்டிற்குள் புகுந்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திங்கள்சந்தை:
வில்லுக்குறி அருகே நள்ளிரவில் டெம்போ டிரைவரின் வீட்டிற்குள் புகுந்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
டெம்போ டிரைவர்
வில்லுக்குறி அருகே உள்ள கரிஞ்சான்கோடு பகுதியை சேர்ந்தவர் பரமானந்தன்பிள்ளை. இவருடைய மகன் நாகராஜன் (வயது41), டெம்போ டிரைவர்.இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு நாகராஜன் இரவு குடும்பத்துடன் தூங்கினார். அதிகாலை 4.30 மணியளவில் நாகராஜனின் மனைவி கண் விழித்து பார்த்தபோது, வீட்டில் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை திருட்டு
 உடனே, எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த நெக்லஸ், மோதிரங்கள், கம்மல் என மொத்தம் 5 பவுன் ஒரு கிராம் நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் அனைவரும் அசந்து தூங்கிய பின் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. 
பின்னர், இதுகுறித்து நாகராஜன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story