தற்சார்பு நிலையை நோக்கி இந்தியா செல்கிறது; கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட திட்டங்களால் தற்சார்பு நிலையை நோக்கி இந்தியா செல்கிறது என கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.
பெங்களூரு:
உலக இந்திய வர்த்தக அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகம் ஞானம், அறிவியல், ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகம் முன்னணி மாநிலமாக உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் மென்பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, புதிய தொழில் தொடங்குதல் போன்ற திட்டங்களால் இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் திறன் மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாட்டின் கல்வி முறை, ஞானம், அறிவியல், விவசாயம், பொருளாதாரம் போன்றவை உயர்ந்த நிலையை கொண்டது. இந்தியாவில் அனைத்து வளங்களும் நிறைந்துள்ளதால் உலக குரு மற்றும் தங்க பறவை என்று நமது நாட்டை அழைத்தனர். ஆரோக்கியமான உலகை உருவாக்க அனைவரும் கைகோர்த்து செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.
Related Tags :
Next Story