சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடுவுக்கு அரக ஞானேந்திரா பொறுப்பு ஏற்க வேண்டும்-டி.கே.சிவக்குமார்


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடுவுக்கு அரக ஞானேந்திரா பொறுப்பு ஏற்க வேண்டும்-டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 24 April 2022 9:16 PM IST (Updated: 24 April 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடுவுக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்

சிக்கமகளூரு:

டி.கே.சிவக்குமார் பேட்டி

  சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஹரிஹரபுராவில் உள்ள அதிசங்கராச்சாரியார் மடத்தின் மகா கும்பாபிஷேக விழா நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

  இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனி ஹெலிகாப்டர் மூலம் கொப்பாவுக்கு வந்தார். பின்னர் அவர், ஆதிசங்கராச்சாரியார் மடத்திற்கு சென்று மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அவருக்கு, மடத்தின் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மடாதிபதி சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமியிடம் ஆசிர்வாதம் பெற்றார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொறுப்பு ஏற்க வேண்டும்

  கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டிற்கான பொறுப்பை போலீஸ்-மந்திரி அரக ஞானேந்திரா ஏற்று கொள்ள வேண்டும்.

  இந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது காங்கிரஸ் தான். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் தற்போது வரை ஊழல் நடந்து கொண்டு வருகிறது. 

மாநிலத்தில் அனைத்து துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது. ஆகையால் கர்நாடக அரசு ஊழலில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஊழலில் ஈடுபடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story