கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் நிதி நிலைமைக்கு ஏற்ப செய்து தரப்படும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்


கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் நிதி நிலைமைக்கு ஏற்ப செய்து தரப்படும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 April 2022 10:09 PM IST (Updated: 24 April 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் நிதி நிலைமைக்கு ஏற்ப செய்து தரப்படும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.

கிருஷ்ணகிரி:
கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் நிதி நிலைமைக்கு ஏற்ப செய்து தரப்படும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.
சிறப்பு கிராம சபை கூட்டம் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி அருகே கங்கலேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் கிராமசபை கூட்டம் குறித்து எழுதிய வாழ்த்து கடிதம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின உறுதிமொழி பொதுமக்கள் எடுத்து கொண்டனர். பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
திட்டப்பணிகள் 
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கருத்துகள் தெரிவித்துள்ளனர். கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஒவ்வொன்றாக நிதி நிலைமைக்கு ஏற்ப செய்து தரப்படும். கங்கலேரி கிராம ஊராட்சிக்கு 2020-21-ம் நிதியாண்டில் சிறப்பான முறையில் செயல்பட்டமைக்காக ‘தீன்தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சாஸ்காதிகரன் புரஸ்கார்” விருது பெற்றுள்ளது. இந்த ஊராட்சிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஆப்தாபேகம், ஊராட்சி செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story