கிருஷ்ணகிரி, பாகலூரில் மாடு திருடிய 4 பேர் கைது
கிருஷ்ணகிரி, பாகலூரில் மாடு திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பெரியார் நகர் மதினா மசூதி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை சோதனை செய்த போது அதில் ஒரு பசுமாடு இருந்தது. விசாரணையில் கிருஷ்ணகிரியில் இருந்து மாட்டை திருடி வந்தது தெரிந்தது. இதையடுத்து மாட்டை திருடியதாக திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த அஜித் (வயது 21), திருப்பத்தூர் மாவட்டம் அச்சங்கலம் நந்தகுமார் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த தனுஷ் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாடு, சரக்கு ஆட்டோ, ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாகலூர் அருகே உள்ள அட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி அமரேஷ். இவர் தனது வீட்டு அருகில் கொட்டகையில் மாடு மற்றும் கன்று குட்டியை கட்டி வைத்திருந்தார். இதை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து அமரேஷ் பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மாட்டை திருடிய அதே பகுதியை சேர்ந்த குருராஜ் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் மாட்டையும், கன்று குட்டியையும் மீட்டனர்.
Related Tags :
Next Story