தர்மபுரி பகுதியில் வீடுகளில் நகை, பணம் திருடியவர் கைது


தர்மபுரி பகுதியில் வீடுகளில் நகை, பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 24 April 2022 10:11 PM IST (Updated: 24 April 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி பகுதியில் வீடுகளில் நகை-பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி:
தர்மபுரி எம்.ஜி.ஆர். நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் நகை, பணம் திருட்டு போனது. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்யபபட்டது. இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி நகரில் நேற்று முன்தினம் இரவு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் சைக்கிளை போட்டு விட்டு ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் திருப்பத்தூரை சேர்ந்த அண்ணாமலை என்கிற சங்கர் (வயது 58) என்பதும், தர்மபுரி நகரில் திறந்து கிடக்கும் வீடுகளில் நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story