வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 24 April 2022 10:17 PM IST (Updated: 24 April 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

அடுக்கம்பாறை

வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

கிராமசபை கூட்டம்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்துமதுரை ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ்ய தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்  நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சரத்குமார் வரவேற்றார். 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பண்டியன் பேசியதாவது:-

வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை

சாத்துமதுரை கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு பட்டா இல்லை, வீடுகள் இல்லை என்ற நிலைமை இருக்கக்கூடாது. அரசு பள்ளிகளுக்கு தேவையான திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

தொடர்ந்து பொதுமக்கள் சாத்துமதுரை கிராம பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் சரிவர நிற்பதில்லை, அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். தொடர்ந்து அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். 

நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செந்தில்வேல், ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா கமல் பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், பானுமதி, ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், வேலூர் தாசில்தார் செந்தில், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் உலகநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சங்கர், துணை தலைவர் திவ்யா ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story