கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க.வில் உள்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கல்
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க.வில் உள்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி தி.மு.க. வடக்கு மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை நகராட்சி மற்றும் சின்னசேலம், வடக்கனந்தல், சங்கராபுரம் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வார்டு நிர்வாகிகளுக்கான உள்கட்சி தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.
இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கயற்கண்ணி, ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், அன்புமணிமாறன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வாணியந்தல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி.காந்திசெல்வன் வார்டு செயலாளர், அவைத்தலைவர், துணை செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கான விருப்ப மனுக்களை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், சின்னத்தம்பி, கிருஷ்ணன், வைத்தியநாதன், கே.வி.முருகன், சந்திரசேகர், உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் டேனியல்ராஜ், சங்கராபுரம் நகர செயலாளர் துரைதாகப்பிள்ளை, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கமருதீன், நாகராஜ், ஆசீர்வாதம், விஜயகுமார், சுப்பிரமணியன், வீரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ரவிக் குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story