புதிய வீடுகள் கட்டித்தரப்படுமா?
பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொகுப்பு வீடுகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள கீழத்தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. தற்போது இந்த தொகுப்பு வீடுகள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் வீடுகளின் மேற்கூரையின் சிமெண்டு கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்
இதனால் வீட்டில் வசிப்பவர்கள் ஏதேனும் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். மேலும் வீடு இடிந்து விழுந்து உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற பயத்துடன் வசித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story