முகையூர், நீலமங்கலத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் அமைச்சர் பொன்முடி பங்கேற்பு


முகையூர், நீலமங்கலத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
x
தினத்தந்தி 24 April 2022 11:02 PM IST (Updated: 24 April 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

முகையூர், நீலமங்கலத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முகையூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.


திருக்கோவிலூர், 

தேசிய ஊராட்சிகள் தினமான நேற்று  தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில்  விழுப்புரம் மாவட்டம் முகையூரில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். 

புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜி.ரவிச்சந்திரன், அ.சா.ஏ. பிரபு மற்றும் எம்.ஆர்.ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

688 ஊராட்சிகள் 

இதில் அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளிலும் இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

 இதன் நோக்கம் என்னவென்றால் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை மக்கள் ஒன்று கூடி தேர்வு செய்து பணிகளை நிறைவேற்றுவதே ஆகும். முகையூர் ஊராட்சியில் 19 பேருக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்படுகிறது. 235 குடும்பங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்கு பணிகள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.  

கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், ஒன்றிய குழு துணை தலைவர் மணம்பூண்டி பி.மணிவண்ணன், முகையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சீனுவாசன், சாம்ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கோபால், வேணுகோபால், வீரமணி, ஜனா, பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் லூயிஸ் நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி ஒன்றியம் நீலமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சிமன்ற தலைவர் களின் கூட்டமைப்பு தலை வருமான ஜெயசங்கர் தலைமை தாங்கினார்.

 உதவி இயக்குனர் ஊராட்சிகள் ரத்தினமாலா, இணைஇயக்குனர் (வேளாண்மை) வேல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிராமத்தின் வளர்ச்சி மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது என்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி பேசினார்.

 தொடர்ந்து, ஊராட்சி செயலாளர் முத்தையன் தீர்மானத்தை வாசித்தார். கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் ராதிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், ஊராட்சி மன்ற துணைதலைவர் அசோகன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story