மாணவர்கள் புத்தகங்கள் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும். கலெக்டர் அமர் குஷ்வாஹா பேச்சு


மாணவர்கள் புத்தகங்கள் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும். கலெக்டர் அமர் குஷ்வாஹா பேச்சு
x
தினத்தந்தி 24 April 2022 11:03 PM IST (Updated: 24 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் புத்தகங்கள் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டார்.

வாணியம்பாடி


வாணியம்பாடியை அடுத்த சின்னவேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
முகாமில் நாட்டு நலப்பணி திட்டத்தில் பங்கு பெற்ற 50 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு வகையான போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

நமது மாவட்டத்தில் 5 ஆண்டு காலத்திற்கு பிறகு அண்டை மாவட்டத்தில், அண்டை மாநிலத்தில் மற்றும் வெளிநாடுகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் பணிபுரிவார்கள். மாணவ, மாணவிகளுக்கு நாம் எதை சொல்லிக் கொடுத்தாலும் ஆக்கபூர்வமாக கற்றுக்கொடுக்க வேண்டும். சிறு சிறு கதைகள் மூலம் எடுத்துரைத்தால் அவர்களுக்கு நன்றாக புரியும்.

நூலகத்திற்கு சென்று நல்ல புத்தகங்கள் வாசிக்கும் பொழுது நல்ல மனசு இருக்கும், நல்ல மனசு இருந்தால் நல்ல சமூகம் அமையும், நல்ல சமூகம் அமைந்தால் நல்ல மாவட்டம் அமையும், நல்லமாவட்டம் அமைந்தால் நல்ல மாநிலம் அமையும், நல்ல மாநிலமாக அமைந்தால், நல்ல நாடுஅமையும். எனவே நீங்கள் அனைவரும் புத்தகங்களை நன்கு படிக்க வேண்டும்.

 பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவ, மாணவிகள் புத்தகங்கள் படிப்பதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story