மன்னர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
மன்னர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் கருப்பட்டிபட்டி ஊராட்சி மன்றம் ஆயிப்பட்டி கிராம எல்லையில் சாலை ஓரமாக சத்திரம் ஒன்று உள்ளது. தொண்டைமான் மன்னர் காலத்திலான இந்த சத்திரம் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதில் 2 கல்வெட்டுகளை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், ‘‘இந்த சத்திரம் கடந்த 1781-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி விஜய ரெகுநாத தொண்டைமான் மன்னர் தனது தாயார் “ஸ்ரீ பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் சத்திரம்” என்ற பெயரால் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் தகவல் உள்ளது. கல்லாக்கோட்டை மற்றும் அம்புக்கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கான முக்கிய சாலையாக ஆயிப்பட்டி சாலை இருந்துள்ளதையும், அதன் காரணமாகவே மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இவ்வழியில் சத்திரம் கட்டியுள்ளதையும் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார்.
Related Tags :
Next Story