நாமக்கல் அரசு மருத்துவகல்லூரியில் மாணவர் மன்றம் தொடக்கம்
நாமக்கல் அரசு மருத்துவகல்லூரியில் மாணவர் மன்றம் தொடக்கம்
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு தொடங்கப்பட்டு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்கள் தனி அடையாளமாக விளங்கும் வகையில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அணி தொகுப்பிற்கு யாழ் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது,
இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவர் மன்றத்தின் பல்வேறு அமைப்புகளின் தொடக்க நிகழ்ச்சி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஸ்ரேயா சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவர் மன்றத்தின் பல்வேறு அமைப்புகளை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளின் கலைத்திறமைகளை பார்வையிட்டார்.
இதில் மாணவ, மாணவிகள் தங்கள் பாடல், நடனம், ஓவியத்திறன்களை வெளிப்படுத்தினார்கள். மாணவ, மாணவிகளின் திறன்களை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர் கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரியின் உதவி முதல்வர் லீனா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மருத்துவ பேராசிரியர்கள் சுரேஷ் கண்ணா, ராஜ்குமார், அருள், மணி, திவ்யா, குமுதா உள்பட இணை பேராசிரியர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story