மதநல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
வேடசந்தூரில் மதநல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் பெரிய பள்ளிவாசல் அருகே தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ரமலான் திருநாள் மதநல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட குழு உறுப்பினர் சக்கரை முகமது தலைமை தாங்கி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முருகன் வரவேற்றார். விழாவில், திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பங்கேற்று நோன்பு திறந்து பேசினார். இதில், வேடசந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பஷீர்அகமது, வேடசந்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் சாகுல்அமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story