பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் புதருக்குள் மறைந்திருந்த பாம்பு பிடிபட்டது


பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் புதருக்குள் மறைந்திருந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 24 April 2022 11:11 PM IST (Updated: 24 April 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் புதருக்குள் மறைந்திருந்த பாம்பு பிடிபட்டது

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டிடங்களை சுற்றியும் புதர்மண்டி காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று சென்றது. இதனை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்றனர். பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு புதருக்குள் மறைந்திருந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். இதையடுத்து பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுத்தனர். 
ஆஸ்பத்திரி சுற்றுப்பகுதி புதர்மண்டி காணப்படுவதால் அதனை அகற்றி தூய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story