சிறுமி பலாத்காரம்; 2 வாலிபர்கள் போக்சோவில் கைது


சிறுமி பலாத்காரம்; 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 24 April 2022 11:12 PM IST (Updated: 24 April 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

சிறுமி பலாத்காரம்; 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள நூல் மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சிறுமி நூல் மில்லை விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் சிறுமியை தூக்கி கொண்டு புதர் மறைவில் வைத்து பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து சிறுமி கூச்சல் போட்டதை தொடர்ந்து 2 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறினார். 
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மூட்டை தூக்கும ்தொழிலாளர்கள் விஜயன்( வயது 24,) அய்யாதுரை(29) ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Next Story