ரெயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒடிசா மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 1.25 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார்கள் ஐயப்பன், ராஜ்குமார் ஆகியோர் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர்.
அப்போது பொது பெட்டியில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருந்த 2 பையை சநேத்கத்தின்பேரில் திறந்து பார்த்த போது அதில் தலா மூன்று கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஒடிசா மாநிலம் சுகிரிபட், நந்தாபூர் பகுதியை சேர்ந்த ஜங்கா பங்கி (வயது 25) என்பவரை அரக்கோணம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story