தொடர் மின்வெட்டை கண்டித்து வயலோகம் மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம் நாளை நடக்கிறது
வயலோகம் மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம் நாளை நடக்கிறது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தொடர் மின் வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலமுறை மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் தடை இல்லா மின் வினியோகத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வினோத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அந்த போராட்ட அழைப்பு பரப்பப்பட்டு வருகிறது. அதில் வயலோகம், முதலிப்பட்டி, வேளாம்பட்டி, நிலையபட்டி, மாங்குடி, அகரப்பட்டி உள்ளிட்ட கிராமமக்கள் வயலோகத்தில் உள்ள அண்ணா பண்ணை மின்வாரிய அலுவலகம் முன்பாக நாளை (திங்கட்கிழமை) தலைகீழாக நின்று நூதன போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மின்வெட்டால் தூக்கம் தொலைத்த பொதுமக்கள் தூக்கம் தேடி வயலோகம் சுடுகாட்டுக்கு சென்று படுத்துறங்கி போராட்டம் நடத்தப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வினோத போராட்ட அறிவிப்பு அன்னவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story