தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல் :
தார்சாலை அமைக்கப்படுமா?
பழனி பாரதிநகரில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. இதனால் மழைக்காலத்தில் அந்த பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அந்த சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அறிவாசன், மானூர்.
வேகத்தடை இல்லாததால் விபத்து
பழனி அடிவாரம் இடும்பன் கோவில் சாலையில் பாட்டாளி தெரு பிரிவில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், பழனி.
வீணாகும் குடிநீர்
போடி தேவர் காலனியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் தண்ணீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. தொட்டியில் நீரை நிரப்புவதற்காக பொருத்தப்பட்ட மின் மோட்டாருக்கான மின்சார பெட்டி தொட்டியின் அருகிலேயே உள்ளது. மேலும் தொட்டியில் தண்ணீர் நிரம்பியதும் மின்மோட்டார் நிறுத்தப்படுவதில்லை. தொடர்ந்து இயங்குகிறது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் செல்வதுடன், மின்சார பெட்டி மீதும் விழுகிறது. இதனால் மின்கசிவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹைதர்அலி, போடி.
அடிப்படை வசதி வேண்டும்
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பண்ணைக்காடு பேரூராட்சி 12-வது வார்டில் 1, 2-வது தெருக்களில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை, சிமெண்டு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமன், பண்ணைக்காடு.
Related Tags :
Next Story