மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 24 April 2022 11:49 PM IST (Updated: 24 April 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி உள்ளது.

நொய்யல், 
திருக்காடுதுறையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா  இரவு பூச்சூடுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
26-ந்தேதி பக்தர்கள் அக்ணிகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி, பொங்கல் வைத்தல், மாளவிக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 


Next Story