சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் முருங்கை செடிகள் முறிந்து சேதம்

சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் முருங்கை செடிகள் முறிந்து சேதம்
x
தினத்தந்தி 25 April 2022 12:00 AM IST (Updated: 25 April 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

குண்டடத்தில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 4½ ஏக்கரில் பயிரிட்டிருந்த முருங்கை செடிகள் முறிந்து விழுந்து சேதமானது. மின்னல் தாக்கியதில் ஒரு விவசாயியின் வீட்டு மேற்கூரை சேதமடைந்தது.

குண்டடம்
குண்டடத்தில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால்  4½ ஏக்கரில் பயிரிட்டிருந்த முருங்கை செடிகள் முறிந்து விழுந்து சேதமானது. மின்னல் தாக்கியதில் ஒரு விவசாயியின் வீட்டு மேற்கூரை சேதமடைந்தது.
முருங்கை செடிகள் சேதம்
குண்டடம் பகுதியில் குண்டடம், தேவராஜபட்டணம், கொழிஞ்சிக்காட்டுபுதூர், மேட்டுக்கடை, எரகாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கொழிஞ்சிக்காட்டுபுதூரைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விவசாயியின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த காய்க்கும் தருணத்தில் வளர்ந்து நின்ற 4½ ஏக்கர் பரப்பிலான முருங்கை செடிகள் காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்து சேதமானது.
வீட்டின் மேற்கூரை சேதம்
அந்த பகுதியில் மேலும் சில விவசாயிகளின் தோட்டத்திலும் முருங்கை செடிகள் உடைந்து சாய்ந்தன. குண்டடம் அருகே ஒத்தக்கடை பகுதியில் இரு விவசாயின் வீட்டில் மின்னல் தாக்கியதில் மேற்கூரை முற்றிலும் சேதமானது. 
சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டது. அத்துடன் வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, மின்விளக்குகள், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட மின்சாதனப்பொருட்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Next Story