பாலமோரில் 39.4 மி.மீ. மழை பதிவு
குமரியில் கோடை மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 39.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாகர்கோவில்:
குமரியில் கோடை மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 39.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலையில் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மலையோரம் மற்றும் அணைப்பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
பாலமோரில் 39.4 மி.மீ. பதிவு
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 39.4 மி.மீ. மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பூதப்பாண்டி- 1.4, சிற்றார் 1- 3.4, நாகர்கோவில்- 1.6, பேச்சிப்பாறை- 13.8, பெருஞ்சாணி அணை- 30, புத்தன் அணை- 28.5, சுருளோடு- 37.9, ஆரல்வாய்மொழி- 1.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு 603 கன அடிநீர் தண்ணீர் வருகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
---
Related Tags :
Next Story