சிவசக்தி மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 25 April 2022 12:05 AM IST (Updated: 25 April 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

சிவசக்தி மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது.

அரவக்குறிச்சி, 
அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பாரதி நகரில் சிவசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஊர் பொது மக்களால் நிதி திரட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு தினமும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 48-வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. அதனை முன்னிட்டு சிவசக்தி மாரியம்மனுக்கு தீர்த்தம் விட்டு அலங்காரம் செய்யப்பட்டு 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story