மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை
மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றம்சாட்டினார்.
விருதுநகர்,-
மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றம்சாட்டினார்.
கிராம சபை கூட்டம்
விருதுநகர் யூனியன் மீசலூர் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் திருப்பதி சாமி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:- கிராம பஞ்சாயத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் கிராம மக்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றினால் தான் அதற்கான நிதியை பெற்று நிறைவேற்ற முடியும். 100 நாள் வேலைத்திட்டம் காலை 7 மணிக்கு தொடங்கி 8 மணிக்கு முடிந்து விடுகிறது என்று கூறினார்கள். இது பற்றி நாடாளுமன்றத்தில் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். 100 நாள் வேலை திட்டம் என்பது சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே எந்த அரசு வந்தாலும் இந்த திட்டத்தை நிறுத்த முடியாது. தமிழக அரசு 100 நாள் வேலையை 150 நாளாக்கப்படும் எனதெரிவித்துள்ளது.
இங்கு மயானத்திற்கான பாதையை அடுத்த ஆண்டிற்குள் முடித்துக்கொடுப்பதாக வட்டார வளர்ச்சி அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி கட்டிடத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
மின்தடை
முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை அனுப்பி வைக்காதது தான் காரணம் என குறிப்பிட்டார்.
மேலும் முன்னேற துடிக்கும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்திற்கு மத்திய அரசு எந்தத் திட்டத்தினையும் நிறைவேற்றவில்லை . இதுகுறித்து இங்கு வருகைதரவுள்ள மத்திய மந்திரிகளிடம் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்படும்.
இதைத்தொடர்ந்து சங்கரலிங்காபுரத்தில் நடந்த மருத்துவ முகாமையும் அவர் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story