அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு
சிவகாசி யூனியனில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
சிவகாசி,
சிவகாசி யூனியனில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
கிராம சபை கூட்டம்
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 கிராம பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாரனேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட் டத்தில் யூனியன் தலைவர் முத்துலட்சுமி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) அரவிந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சித்துராஜபுரத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் லீலாவதி சுப்புராஜ், துணைத்தலைவர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜம்மாள் சுப்புராஜ், விஜயலட்சுமி உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் அருள்ராஜ் செய்திருந்தார்.
அனுப்பன்குளம்
அனுப்பன்குளத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு பஞ்சயாத்து தலைவர் கவிதா பாண்டியராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் புஷ்பவேணி, ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். நாரணாபுரத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமசாமி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நடவடிக்கை இல்லை
பள்ளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுடர் வள்ளி சசிக்குமார், சங்கையா, கலைமணி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் லட்சுமணபெருமாள் செய்திருந்தார். ஆனைக்குட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர்களிடம் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story