தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற கழக கூட்டம்
பாணாவரத்தில் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம்
தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில குழு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் குறவா் குடியிருப்பு பெருமாள் கோவில் அருகே நடைபெற்றது.
கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் வினோத் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளா் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளா் ஏ.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீா்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணை செயலாளர்கள் தணிகாசலம், செந்தில்குமாா், மாநில துணை தலைவர்கள் வேலு, குப்பன் உள்ளிட்ட ஏராளமானவா்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளா் மகாலிங்கம் நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story