மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி


மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 April 2022 12:23 AM IST (Updated: 25 April 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு ரூ.55½ லட்சம் கடன் உதவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு ரூ.55½ லட்சம் கடன் உதவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் குழுக்களின் வணிக நடவடிக்கையை தொடங்கிவைத்து உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாவில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஜெகத்ரட்சகன் எம்.பி., கூடுதல் திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், திட்ட இயக்குனர்கள் லோகநாயகி, நாநில தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வரவேற்றார்.

அமைச்சர் காந்தி வழங்கினார்

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு தொழில் குழுக்களின் வணிக நடவடிக்கையை தொடங்கி வைத்து, 41 உற்பத்தியாளர் குழுக்கள், 5 தொழில் குழுக்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சத்து 50 ஆயிரம், மகளிர் திட்டதுறையின் மூலமாக 28 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.21.20 லட்சம் என மொத்தமாக ரூ.55 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.

 முன்னதாக வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் சிமெண்டு குடோன் கட்டும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத் தலைவர், நகர மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story