மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 25 April 2022 12:28 AM IST (Updated: 25 April 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

பெருநாழி அருகே மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்டது.

கமுதி, 

கமுதி தாலுகா பெருநாழி அருகே வெள்ளாங்குளத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்.இவருடைய மனைவி லெட்சுமி (வயது 60). இவர் நேற்று வெள்ளாங்குளம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ேமாட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மூதாட்டியிடம் இப்பகுதியில், பாம்பு ஒன்று சென்று கொண்டிருக்கிறது என்று கூறி பேச்சு கொடுத்து, மூதாட்டியின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். .அருகில் யாரும் இல்லாததால், மூதாட்டி சத்தம் போட்டும் பலன் இல்லை. .பின்னர் பெருநாழி போலீஸ் நிலையத்தில் மூதாட்டி லெட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபரை தேடி வருகின்றனர்.


Next Story