பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் அடிக்கடி மின்தடை-கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் குற்றச்சாட்டு


பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் அடிக்கடி மின்தடை-கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 April 2022 12:32 AM IST (Updated: 25 April 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

ராமேசுவரம், 

பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் நேற்று பஞ்சாயத்து ராஜ் தினத்தையாட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அகிலா பேட்ரிக் தலைமை தாங்கினார். 
கூட்டத்தில் துணைத்தலைவர் முத்துமலர், ஊராட்சி செயலாளர் விசுவநாதன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நித்யா மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக், சமூக ஆர்வலர் முத்துவாப்பா, அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் அக்காள்மடம், தெற்கு வாடி, தோப்புக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மின்வெட்டு

் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பொதுமக்கள் கூறும் போது, பாம்பன் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அதிகமான மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். பாம்பனில் பல தெருக்களில் மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் அதை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். 
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பேசும்போது, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தமிழகம் முழுவதுமே மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது. அதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மின்வெட்டு பிரச்சினை சரியாகிவிடும். சேதமான மின் வயர்களும் விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தங்கச்சிமடம்

இதேபோல் தங்கச்சிமடம் சமுதாய கூடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின்மேரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் ஆமினாம்பாள், ஊராட்சி செயலாளர் கதிரேசன், கூட்டுறவு வங்கி மேலாளர் ரமேஷ், மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முக நாதன் உள்ளிட்ட அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், அடிக்கடி மின்வெட்டு நடைபெறுவதாகவும் கோரிக்கை வைத்தனர். அதற்கு ஊராட்சி மன்றத்தலைவர் அரசு நிதி ஒதுக்கிய பின்னர் புதிதாக சாலைகள் அமைக்கப்படும். மின் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story