கிராமப்புற குளங்களை தூர்வாரி நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை- கலெக்டர்
கிராமப்புறங்களில் உள்ள குளங்களை தூர்வாரி நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
பட்டுக்கோட்டை:-
கிராமப்புறங்களில் உள்ள குளங்களை தூர்வாரி நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
ஆத்திக்கோட்டை ஊராட்சி
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆத்திக்கோட்டை ஊராட்சியில் நேற்று பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது அவர், ‘ஆத்திக்கோட்டையில் நீடித்த நிலையான கிராம வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்த கிராமத்தில் உள்ள குளங்கள் அனைத்தையும் தூர்வாரி நீர்வள ஆதாரத்தை பெருக்கி பசுமையான கிராமமாக மாற்றப்படும். இதேபோல் அனைத்து கிராமங்களிலும் குளங்களை தூர்வாரி நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
முன்னதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். கூட்டத்தில் அண்ணாதுரை எம்.எல்.ஏ., ஒன்றியகுழுத்தலைவர் பழனிவேல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பயனாளிகள் பட்டியல்
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 43 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தோட்டக்கலைத் துறை சார்பில் 2021-2022-ம் ஆண்டில் பயன் பெற்ற பயனாளிகளின் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story