2-வது வாரமாக முயல் வேட்டை திருவிழா


2-வது வாரமாக முயல் வேட்டை திருவிழா
x
தினத்தந்தி 25 April 2022 12:45 AM IST (Updated: 25 April 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

2-வது வாரமாக முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர், 
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முயல் வேட்டை திருவிழா எனும் வினோத வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி சித்திரை மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெரம்பலூர் பெரியார் சிலை பின்புறம், குரும்பலூர், ஆலம்பாடி, சிறுவாச்சூர், திருநகர் ஆகிய பகுதிகளில் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் அப்பகுதிகளில் இருந்து காட்டிற்கு சென்றவர்கள் புதர்களில் மறைந்து இருந்த முயல்களை வேட்டையாடினர். வேட்டையாடியதில் கிடைத்த முயல்களுடன் மாலையில் அவர்கள் ஊருக்குள் திரும்பி வந்தனர். பின்னர் முயல்களை குச்சிகளில் தோரணமாக கட்டி தொங்கவிட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி தெருக்களில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து படையலிட்டு கறியாக பங்கு பிரித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கியதை, அவர்கள் சமைத்து வீட்டிலேயே அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்து, உண்டு மகிழ்ந்தனர்.

Next Story