பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 25 April 2022 1:15 AM IST (Updated: 25 April 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஆர்.பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

தொண்டி,

தொண்டி பேரூராட்சி எம்.ஆர்.பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் வட்டாரக்கல்வி அலுவலர் புல்லாணி தலைமையில் நடைபெற்றது. பள்ளி ்தலைமை ஆசிரியர் மாணிக்கம், பேரூராட்சி கவுன்சிலர் ஜெனிபர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு 20 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தலைவராக நீலாவதி, துணைத்தலைவராக சர்மிளா பானு, ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பள்ளியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் புதிய உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாவட்ட பார்வையாளராக ஆசிரியர் ஜான் பிரிட்டோ கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார். முடிவில் அறிவியல் ஆசிரியர் காளிமுத்து நன்றி கூறினார்.

Next Story